இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ராமநாதபுரத்தை சேர்ந்த 7 மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது மீனவர்களையும் அவர்களது விசைப்படகையும் இலங்கை கடற்படை சிறை பிடித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மீனவர்களை சிறையில் வைப்பதால் அவர்களுக்கு கடுமையான மன உளைச்சலும் குடும்பத்தினருக்கு நிதி நெருக்கடியும் ஏற்படும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மீன்வர்களையும், விசைப்படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.