பலத்த காற்றுடன் கன மழை
இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது;
மன்னார் வளைகுடா முதல் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை நவம்பர் 26ஆம் தேதி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் தேனி, தென்காசி, நெல்லை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவம்பர்-27
நீலகிரி, கோவை, தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்பூர், ஈரோடு, விழுப்புரம், கடலூர், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையில்...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வீடியோவைக் காணலாம்