தமிழ்நாடு

கனமழை எச்சரிக்கை - வானிலை தகவல்

தமிழ்நாட்டில் நாளை 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடியில் கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

Azhagiri Arumugam

கனமழைக்கு வாய்ப்பு

இதுதொடர்பாக, சென்னை மண்டல வானிலை மையம் கூறி இருப்பதாவது;

தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மத்திய மேற்கு வங்கக்கடல் வரை சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. வடக்கு கேரளாவில் இருந்து கர்நாடகா வரை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் நாளை நவம்பர் 24ஆம் தேதி, கடலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட இதர 29 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 25

தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில், புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 26

திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நவம்பர் 27

நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில்...

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகளில் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை.

இவ்வாறு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகளில் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை.

இவ்வாறு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வீடியோவைக் காணலாம்