தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி சமூக நீதி விடுதிகள் என அழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
விடுதிகளுக்கு புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளதே தவிர, மாணவர்களுக்கான உரிமைகள், சலுகைகள், உதவிகளில் எந்த மாற்றமும் இருக்காது என்ற அவர், தலைவர்கள் பெயரில் செயல்படும் விடுதிகள் சமூகநீதி விடுதி என்று சேர்த்து அழைக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் எதிர்கால சந்ததியினர் சாதி வேறுபாடின்றி ஒன்றிணைந்து, சமத்துவ சமுதாயமாக கட்டமைத்திட இந்த முயற்சி அடித்தளமாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.