மு.க.ஸ்டாலின் நியூஸ்தமிழ்24x7
தமிழ்நாடு

சர்ச்சை எம்எல்ஏக்களுக்கு தீபாவளி பரிசா? மு.க.ஸ்டாலின் கேள்வி

’முதல்வரின் கண்டிப்பு உண்மையானால், துணை சபாநாயகர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார்.

Azhagiri Arumugam

என்ன செய்திருக்க வேண்டும்?

இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;

"தவறு செய்தால் விடமாட்டேன்," என முதலமைச்சர் விஜய் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்குக் 'கடும் எச்சரிக்கை' விடுத்தார் என Damage Control-க்காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை plant செய்திருக்கிறார்கள். முதலமைச்சரின் கண்டிப்பு உண்மையானால் என்ன செய்திருக்க வேண்டும்?

திமுக தலைவர்

தீபாவளிப் பரிசு கொடுத்து...

பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் 'Strict officer' செய்தது என்ன? இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார்.

இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா? பஞ்ச் டயலாக் மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை. ரியல் ஆக்சன் எடுத்து, தான் எவ்வளவு strict என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை.

இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

தீபாவளி பரிசா?