மாநிலக் கல்வி நிதியை விடுவிக்க உத்தரவிட கோரி தமிழக அரசு தொடர்ந்த மனு விசாரணைக்கு வரும் தினத்தன்று, மத்திய பள்ளி கல்வித்துறை அமைச்சகத்தின் செயலாளர் சார்பில் வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வட்டியுடன் சேர்த்து வழங்க உத்தரவிட கோரி கடந்த மே மாதம் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படவுள்ளது. இந்த நிலையில் விசாரணையின் போது செயலாளர் சார்பில் வழக்கறிஞர் ஆஜராக தவறினால், மனு மீது தொடர்ந்து விசாரணை நடத்தி உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்ற பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.