தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இல்லை என்பதால், கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 2ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளையும் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.