32 
தமிழ்நாடு

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம்..

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை கடலூரில் தொடங்கி வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

Web Team

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை கடலூரில் தொடங்கி வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

சிதம்பரம் லால்புரம் பகுதியில் தனியார் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை நேரில் பார்வையிட்ட முதலமைச்சர், மனுக்களோடு காத்திருந்த மக்களிடம் கலந்துரையாடினார்.

தொடர்ந்து மனுக்களின் நிலை, பெறப்படும் முறை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதலமைச்சர், பயனாளிகளுக்கு ஆணைகளையும் வழங்கினார். இந்நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.