28 
தமிழ்நாடு

தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்.. கல்வி நிதியை விடுவிக்க உத்தரவிடக் கோரி மனு

தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அரசியலமைப்பின் 131-வது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், பி.எம்ஸ்ரீ, சமக்ர சிக் ஷா அபியான் திட்ட நிதியை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்றும், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாததால் நிதியை நிறுத்தி வைப்பது ஏற்புடையதல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Srini Vasan

தமிழக அரசுக்குக் கிடைக்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்காததால் தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் பாதிக்கப்படுவதாகவும், எனவே கல்வி நிதியை 6 சதவீத வட்டியுடன் 2 ஆயிரத்து 291 கோடியாக வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.