பாதுகாப்பது ஏன்?
இதுதொடர்பாக, எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது;
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத மெசேஜ் அனுப்பிய குற்றச்சாட்டில் த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை இந்த டம்மி முதல்வர் இன்னமும் பாதுகாப்பது ஏன்?
கோரிக்கை வைத்தவரை அடித்து துன்புறுத்திய துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?
இது ஆட்சியா? இல்லை, த.வெ.க.வினர் அத்துமீறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கோல சிண்டிகேட்-ஆ?
மக்கள் மறந்து விடுவார்களா?
டம்மி முதல்வருக்கு தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை. ஆனால், அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் - த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனைக்கூட்டம் என்று வேக வேகமாக Diversion politicsல் இறங்குகிறார்.
ஆலோசனைக் கூட்டத்தில், அனல் கக்கினார், அக்கினி குழம்பை அள்ளி ஊற்றினார் என்று ஆன்-லைன் மாபியாவையும், Paid பேரில்லா பிச்சைகளையும் வைத்து ரீல்ஸ் ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா?
மவுன முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் உங்கள் கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள். இல்லை மக்கள் சக்தி தட்டி வைக்கும்.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.