காலை 5.30 மணிக்கு...
இதுதொடர்பாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது;
மத்திய அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக இன்று நவம்பர் 13ஆம் தேதி காலை 5.30 மணி அளவில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, காலை 8.30 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 14ம் தேதி வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், நவம்பர் 15ம் தேதி காலை அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக் கூடும்.
இது மேலும் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் நவம்பர் 16ஆம் தேதி மாலை புயலாக வலுப்பெறக் கூடும்.
காற்றழுத்த தாழ்வு பாதை
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியுடன் தொடர்புடைய வளிமண்டல சுழற்சியிலிருந்து, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் வழியாக மாலத்தீவின் வடக்கு பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
மழைக்கு வாய்ப்பு
இதனால், இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நவம்பர்-15
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
நவம்பர்-16
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நவம்பர்-17,18
தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
நவம்பர்-19
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
நவம்பர் 17ஆம் தேதி வரை அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வீடியோவைக் காண...