மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்வதேச சேவைகள் முடக்கம் தொழில்நுட்பக் கோளாறால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு அவுட்லுக், மைக்ரோசாப்ட் டீம்ஸ் உள்ளிட்ட சேவைகள் முடக்கம்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்வதேச சேவைகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவுட்லுக், மைக்ரோசாப்ட் டீம்ஸ் உள்ளிட்ட சேவைகள் முடங்கியதால் ஆஸ்திரேலிய உளவு அமைப்பு, காவல்துறை மற்றும் ஜப்பான் அரசு அலுவலகங்களின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் இண்டிகோ, ஆகாசா ஏர் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இது சைபர் தாக்குதல் இல்லை என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.