சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 880 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம், 95 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 12 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் சரிந்தது. ஒரு கிராமுக்கு 235 ரூபாய் குறைந்து, 11 ஆயிரத்து 980 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
இந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 5 ஆயிரத்து 80 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் 10 ஆயிரத்து 200 ரூபாய் சரிந்ததால் நகை வாங்கும் மக்கள் மகிழ்ந்துள்ளனர்.
வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து, 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 180 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
நவம்பர் 16
ஒரு சவரனுக்கு 600 ரூபாய் சரிந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 75 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 12,540 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 190 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 90,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
நவம்பர் 17
சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்திற்கும் கீழ் சென்றது, ஒரு பவுன் 99,760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 70 ரூபாய் விலை சரிந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 12,470 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை, ஒரு கிராம் 190 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 90,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
நவம்பர் 18
ஒரு சவரனுக்கு 2,040 ரூபாய் சரிந்து, 97,720 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 255 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 12,215 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்தது. ஒரு கிராம் 185 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 85,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
நவம்பர் 19
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 880 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம், 95 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 12 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் சரிந்தது. ஒரு கிராமுக்கு 235 ரூபாய் குறைந்து, 11 ஆயிரத்து 980 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து, 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 180 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
நவம்பர் 15 - ரூ.1,00,920
நவம்பர் 16 - ரூ.1,00,320
நவம்பர் 17 - ரூ.99,760
நவம்பர் 18 - ரூ.97,720
நவம்பர் 19 - ரூ.95,840 இன்று