வர்த்தகம்

ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.480 உயர்வு

சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம், 92 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

Azhagiri Arumugam

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம், 92 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை ஏறுமுகத்தில் உள்ளது. ஒரு கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து, 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

தங்கத்தை போலவே வெள்ளியின் விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 170 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 24

ஒரு சவரனுக்கு 920 ரூபாய் அதிகரித்து, 93,720 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 115 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 11,715 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 175 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 75,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 25

ஒரு சவரனுக்கு 2,360 ரூபாய் விலை குறைந்து, 91,360 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 295 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 11,420 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 165 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 26

ஒரு சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து, ஒரு பவுன் 92,320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 120 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 11,540 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் இரண்டாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 165 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 27

ஒரு சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம், 92 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து, 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 170 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்

நவம்பர் 24 - ரூ.93,720

நவம்பர் 25 - ரூ.91,360

நவம்பர் 26 - ரூ.92,320

நவம்பர் 27 - ரூ.92,800 இன்று