பால் விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 அதிகரிப்பு விவசாயிகளுக்கான கொள்முதல் செலவு உயர்ந்ததாக விளக்கம்
முன்னணி பால் நிறுவனமான மதர் டெய்ரி, பால் விலையை லிட்டருக்கு 2 முதல் 4 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. இந்த புதிய விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
விவசாயிகளிடம் பால் வாங்கும் கொள்முதல் செலவு உயர்ந்திருப்பதன் காரணமாகவே இந்த விலையேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், பால் விலையும் கூடியிருப்பது சாமானிய மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.