வர்த்தகம்

சவரனுக்கு ரூ.360 குறைந்து, ரூ.91,720க்கு விற்பனை

கடந்த சில நாட்களாக அதிரடியாக விலை குறைந்த தங்கம் விலை இன்று லேசாக சரிந்தது.

Azhagiri Arumugam

சவரனுக்கு மேலும் 360 ரூபாய் குறைந்து, 91 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 11 ஆயிரத்து 465 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

வரும் நாட்களிலும் தங்கம் விலை சரிவை சந்திக்கும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். தங்கம் விலை குறைந்தாலும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 175 ரூபாய்க்கும், கிலோ ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 18

ஒரு சவரனுக்கு 2,040 ரூபாய் சரிந்து, 97,720 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 255 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 12,215 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்தது. ஒரு கிராம் 185 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 85,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 19

ஒரு சவரனுக்கு ஆயிரத்து 880 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம், 95 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 12 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் சரிந்தது. ஒரு கிராமுக்கு 235 ரூபாய் குறைந்து, 11 ஆயிரத்து 980 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து, 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 180 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

நவம்பர் 20

ஒரு சவரனுக்கு 3,760 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் 92,080 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.470 விலை குறைந்து, ஒரு கிராம் 11,510 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தை போன்று தொடர் இறங்குமுகத்தில் வெள்ளி விலை, கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 175 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

நவம்பர் 21

ஒரு சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து, 91 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 11 ஆயிரத்து 465 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 175 ரூபாய்க்கும், கிலோ ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

வீடியோவில் காண...

ஒரு சவரன் விலை நிலவரம்

நவம்பர் 18 - ரூ.97,720

நவம்பர் 19 - ரூ.95,840

நவம்பர் 20 - ரூ.92,080

நவம்பர் 21 - ரூ.91,720 இன்று