வர்த்தகம்

இருமுறை விலை உயர்ந்த ஆபரணத் தங்கம்

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.94,160க்கு விற்பனை ஆனது. காலையில், ஒரு சவரனுக்கு ரூ.480 உயர்ந்த நிலையில் தற்போது ரூ.1,360 உயர்ந்து ஒரே நாளில் ரூ.1,840 விலை உயர்வை கண்டுள்ளது.

Azhagiri Arumugam

நவம்பர் 25

ஒரு சவரனுக்கு 2,360 ரூபாய் விலை குறைந்து, 91,360 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 295 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 11,420 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 165 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 26

ஒரு சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து, ஒரு பவுன் 92,320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 120 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் 11,540 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் இரண்டாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 165 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 27 காலை

ஒரு சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம், 92 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து, 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 170 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 27 பிற்பகல்

சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.94,160க்கு விற்பனை ஆனது. காலையில், ஒரு சவரனுக்கு ரூ.480 உயர்ந்த நிலையில் தற்போது ரூ.1,360 உயர்ந்து ஒரே நாளில் ரூ.1,840 விலை உயர்வை கண்டுள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 170 ரூபாய் உயர்ந்து 11,770 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்

நவம்பர் 24 - ரூ.93,720

நவம்பர் 25 - ரூ.91,360

நவம்பர் 26 - ரூ.92,320

நவம்பர் 27 - ரூ.92,800 இன்று காலை

நவம்பர் 27 - ரூ.94,160 இன்று பிற்பகல்