அமெரிக்க தேர்தல் முடிவுகள் எதிரொலியால், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டாவது முறையாக அதிகரித்தது.
ஒரு சவரனுக்கு 2,400 ரூபாய் உயர்ந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 4,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 300 ரூபாய் விலை அதிகரித்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 13,100 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 210 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 10,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.