Myanmar 
உலகம்

மியான்மர் நாட்டில் 3.5 ரிக்டர் அளவில் நில அதிர்வு

பூமியின் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

Web Team

மியான்மர் நாட்டில் 3.5 ரிக்டர் அளவில் மிதமான நில அதிர்வு உணரப்பட்டது. இந்திய நேரப்படி காலை 2.40 மணியளவில் உணரப்பட்ட இந்த நில அதிர்வு, பூமியின் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 23.95 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 94.20 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் நில அதிர்வு இருந்ததாக கணிக்கப்பட்டுள்ளது.