காசா அமைதி திட்டத்தில் முதற்கட்டமாக உயிருடன் 20 பேர், உயிரற்று 28 பேர் என 48 இஸ்ரேலிய பணயக் கைதிகளை நாளை ஹமாஸ் விடுவிக்க உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அதிபர் டிரம்பின் காசா அமைதி திட்டத்திற்கு இருதரப்பும் ஒப்புக்கொண்டன.
இது தொடர்பாக எகிப்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, காசாவிலிருந்து பகுதியளவு தனது பாதுகாப்பு படைகளை திரும்ப பெறுவதாக அறிவித்தார்.
ஹமாஸ் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதாக அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக திங்கள்கிழமை காலை ஹமாஸ் மற்றும் இஸ்ரேலில் கைதிகள் பரிமாற்றம் தொடங்குகிறது.