Japan earth quake 
உலகம்

ஜப்பானில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

சுனாமி எச்சரிக்கை எதும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்தான தகவல் வெளியாகவில்லை.

Manigandan Raja

ஜப்பானின் மேற்கு ஷிமானே மாகாணத்தில் 6.2 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். அதனை தொடர்ந்து அடுத்தடுத்து நான்கு முறை நில அதிர்வுகள் உணரப்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்தான தகவல் வெளியாகவில்லை.