25 
உலகம்

பனாமாவில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு..

பனாமாவில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Web Team

பனாமாவில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் கோஸ்டா ரிகாவின் (( Costa Rica)) எல்லைக்கு அருகில் உள்ள பனாமாவின் சிரிகுய் ((Chiriquí ))மாகாணத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் உருவானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அடிக்கடி நில அதிர்வு நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்ற மேற்கு பனாமாவில் உள்ள சிரிகுய் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதன் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறிய அதிகாரிகள் சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என தெரிவித்தனர்.