இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 6.6 ரிக்டர் என்ற அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 10:26 மணியளவில் ஆச்சே மாகாணத்திற்கு அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையம் 25 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளது. சென்யார் சூறாவளியால் பெரும் வெள்ளத்தில் மக்கள் சிக்கித் தவித்து வரும் நிலையில் தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவித்துள்ள இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மையம் கடலோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி உள்ளது.