அமெரிக்காவில், டொனால்டு டிரம்ப் அதிபராக பதவியேற்ற கடந்த 10 மாதங்களில் மட்டும், மாணவர், சுற்றுலா, தற்காலிக பணிக்காக வரும் குடியேற்றம் அல்லாத 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதில் பாதிக்கும் மேற்பட்ட விசாக்கள், மூன்று முக்கிய காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளன. மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 16,000 விசாக்களும், தாக்குதல் போன்ற காரணங்களுக்காக 12,000 விசாக்களும் மற்றும் திருட்டு வழக்கில் சிக்கிய காரணத்தால் 8,000 விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.