Afghanisthan 
உலகம்

புகழ்பெற்ற சைனீஸ் உணவகத்தில் பயங்கர வெடிவிபத்து

பயங்கரவாத தாக்குதலா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Manigandan Raja

ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் உள்ள புகழ்பெற்ற சைனீஸ் உணவகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

காபூல் நகரின் முக்கியமான வணிக பகுதியில் ஒன்றாக கருதப்படும் ஷஹர்-இ-நவ் பகுதியில் சைனீஸ் உணவகத்தை குறிவைத்து இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காபூலில் மிகவும் பாதுகாப்பான பகுதியாக கருதப்படும் இப்பகுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், பயங்கரவாத தாக்குதலா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.