சீனாவின் ஹாங்காங் அடுத்த தை போ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 44-ஆக அதிகரித்துள்ளது. அடுத்தடுத்து உள்ள 7 அடுக்குமாடி குடியிருப்புகளில் இந்த தீ விபத்து ஏற்பட்ட நிலையில், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 279 பேர் காணாமல் போனதாக கூறப்படும் நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.