ரியாத் 
உலகம்

மிக உயரமான கட்டடமான PIF டவர் மீது மீண்டும் தாக்குதல்

ஏவுகணை போன்ற பொருள் ஒன்று தாக்கியதாக தகவல் சேத விவரம் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை

Manigandan Raja

சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள மிக உயரமான கட்டடமான PIF டவர் எனப்படும் பொது முதலீட்டு நிதி கோபுரத்தின் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்குள் நடத்தப்படும் 2-வது தாக்குதல் இதுவாகும். அடையாளம் தெரியாத ஏவுகணை போன்ற பொருள் ஒன்று 385 மீட்டர் உயரமுள்ள PIF டவர் மீது தாக்கியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, அப்பகுதியில் இருந்த பாதசாரிகள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.