அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் காயமடைந்ததாக ஹாரி கவுண்டி காவல்துறை தெரிவித்துள்ளது.
மிர்ட்டில் கடற்கரையிலிருந்து வடகிழக்கே சுமார் 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லிட்டில் ரிவரில் குடியிருப்புக்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 11 பேர் காயமடைந்ததாக கூறிய காவல்துறை உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடபடவில்லை.