ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய மாலுமிகள் கப்பல் மீது தாக்குதல்
27 மாலுமிகள் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு
ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் 27 இந்திய மாலுமிகளுடன் சென்ற கச்சா எண்ணெய் கப்பல் மீது 'லிம்பெட்' ரக வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலால் கப்பலின் எஞ்சின் அறையில் தீ விபத்து ஏற்பட்ட போதிலும், இந்திய மாலுமிகள் அனைவரும் காயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பாக உள்ளதாக மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.