UAE 
உலகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் பேருந்து லாரி மோதி விபத்து

இந்தியர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு: 14 பேர் படுகாயம் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது

Manigandan Raja

ஐக்கிய அரபு அமீரகத்தில் பேருந்தும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் இந்தியர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். ராஸ் அல் கைமாவின் அல் வதான் சாலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பயணிகள் பேருந்து மோதியது.

விபத்து

பேருந்தில் 41 பேர் பயணித்த நிலையில், 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 16 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரிழந்தனர்.