Sri lanka boat damaged 
உலகம்

விபத்தில் சிக்கி தரைதட்டிய ஆழ்கடல் மீன்பிடி படகுகள்

பழுதான ஒரு படகை, மற்றொரு படகில் கட்டி காரைதீவில் இருந்து வாழைச்சேனை துறைமுகத்துக்கு இழுத்துச் சென்றனர்.

Web Team

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் விபத்தில் சிக்கி தரைதட்டிய நிலையில், அதிர்ஷ்டவசமாக 5 மீனவர்கள் உயிர் தப்பினர். பழுதான ஒரு படகை, மற்றொரு படகில் கட்டி காரைதீவில் இருந்து வாழைச்சேனை துறைமுகத்துக்கு இழுத்துச் சென்றனர். அப்போது, மற்றொரு படகின் இன்ஜினும் பழுதானதால், ​பலத்த காற்று மற்றும் அலை காரணமாக சவுக்கடி கடற்பரப்பில் தரைதட்டின.