Iran 
உலகம்

"மறு அறிவிப்பு வரும்வரை ஈரான் நாட்டுக்கு செல்ல வேண்டாம்"

தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தின் இணைய தளத்தை உன்னிப்பாக கண்காணிக்குமாறும் அறிவுறுத்தி உள்ளது.

Manigandan Raja

மறு அறிவிப்பு வரும்வரை ஈரான் நாட்டுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ஈரானின் முக்கிய நகரங்களில் வணிகர்கள் நடத்தி வந்த போராட்டம் வன்முறையாக மாறி, இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். எனவே, இந்தியர்கள் அத்தியாவசியமற்ற ஈரான் பயணத்தை தவிர்க்குமாறும், ஈரானில் உள்ள இந்தியர்கள் மற்றும் அதிகாரிகள் உரிய எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும், போராட்டம் நடைபெறும் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கும்படியும், தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தின் இணைய தளத்தை உன்னிப்பாக கண்காணிக்குமாறும் அறிவுறுத்தி உள்ளது.