துபாய் போலீசாரின் ரோந்து படையில் அதிநவீன பைக் BMW M 1000 RR சூப்பர் பைக் ரோந்து படையில் இணைப்பு சுமார் 218 ஹார்ஸ் பவர் திறன் கொண்ட சூப்பர் பைக்
துபாய் போலீசாரின் ரோந்து படையில், அதிநவீன BMW M 1000 RR சூப்பர் பைக் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. சுமார் 218 ஹார்ஸ் பவர் திறன் கொண்ட இந்த சூப்பர் பைக், மணிக்கு 300 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.
அதிவேகத்தில் செல்லும் வாகனங்களைக் கண்காணிப்பது, முக்கிய நிகழ்ச்சிகளின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது உள்ளிட்ட பணிகளுக்காக இந்த பைக் பயன்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே லம்போர்கினி, ஃபெராரி உள்ளிட்ட சொகுசு கார்களைக் காவல்துறை ரோந்து பணியில் பயன்படுத்தி வரும் துபாய் போலீசார், தற்போது சூப்பர் பைக்கையும் இணைத்துள்ளனர்.