ஏவுகணை 
உலகம்

ஈரானுக்கு எதிரான போரில் காலாவதியான ஏவுகணைகள்

அமெரிக்க கடற்படை செயலர் நாடாளுமன்ற குழுவிடம் தகவல் "காலாவதியான டோமாஹாக் ஏவுகணைகளை பயன்படுத்தினோம்"

Manigandan Raja

ஈரானுக்கு எதிராக காலாவதியான ஏவுகணைகளை அமெரிக்கா பயன்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Iran war

ஈரான் போர் குறித்து அமெரிக்க நாடாளுமன்ற குழுவிடம் விளக்கம் அளித்த அந்நாட்டின் கடற்படை செயலாளர் ஹூவாங் சாவோ, காலாவதியானது என வகைப்படுத்தப்பட்ட ஏவுகணைகளை ஈரானுக்கு எதிரான போரில் கடற்படை பயன்படுத்தியதாகவும், குறிப்பாக காலாவதியான டோமாஹாக் ஏவுகணைகளை பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும், எத்தனை ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து தெரிவிக்கவில்லை.