இந்தோனேஷியாவில் சட்டவிரோதமாக செயல்பட்ட தங்க சுரங்கத்திற்குள் வெள்ளம் புகுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். சிசியுரு (Ciseureuh) ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேற்கு ஜாவாவின் போகோர் ரீஜென்சியில் (Bogor Regency) இருந்த சுரங்கத்தில் புகுந்தது.
சுரங்கத்தில் ஆட்கள் சிக்கி இருப்பது, 16 மணி நேரத்திற்கு பிறகே தெரிய வந்த நிலையில், அங்குள்ள 23 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.