16 
உலகம்

வங்கதேசத்தை அமெரிக்காவிடம் விற்றுக் கொண்டிருக்கும் யூனுஸ்.. வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு

வங்கதேசத்தை அதன் இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் அமெரிக்காவிடம் விற்றுக் கொண்டிருப்பதாக, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டியுள்ளார்.

Admin News Tamil

வங்கதேசத்தை அதன் இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் அமெரிக்காவிடம் விற்றுக் கொண்டிருப்பதாக, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டியுள்ளார்.

சமீபத்தில் தனது ஆவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டது சட்டவிரோதமானது என கண்டனம் தெரிவித்து ஆடியோ வெளியிட்டுள்ள ஷேக் ஹசீனா, தனது ஆட்சியின் போது சர்வதேச அங்கீகாரம் பெற்ற யூனுஸ், தனது அரசு யாரை எதிர்த்து போராடியதோ அந்த பயங்கரவாதிகளின் கரங்களிலேயே தேசத்தை ஒப்படைத்திருப்பதாக சாடியுள்ளார்.

மேலும் அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் என்பதற்காக, தாம் ஒருபோதும் நாட்டை விற்க துணிந்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.