GTA 6 
உலகம்

தி ஒடிஸி படத்தின் மொத்த வசூலை தாண்டிய GTA 6 கேம்

முதல்நாளிலேயே 1.905 கோடி பிரதிகள் விற்று தீர்ந்ததாக தகவல் வெளியான முதல் நாளே ரூ.15,456 கோடி வருவாய் ஈட்டி சாதனை

Manigandan Raja

உலகம் முழுவதும் உள்ள வீடியோ கேம் பிரியர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ எனப்படும் ஜிடிஏ 6 கேம், முதல் நாளிலேயே, சுமார் 15 ஆயிரத்து 456 கோடி வருவாய் ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளது.

இதுவரை 1.905 கோடி பிரதிகள் விற்பனையாகியுள்ள நிலையில், இது கடந்த ஜூலை மாதம் வெளியாகி உலகம் முழுவதும் 15 ஆயிரத்து 162 கோடி ரூபாய் வசூலித்த தி ஒடிஸி திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் சாதனையை முதல் நாளிலேயே முறியடித்து சாதனை படைத்துள்ளது.