Bnagaladesh 
உலகம்

ஆடை தொழிற்சாலையில் காவலாளியாக பணிபுரிந்தவர்

வங்கதேசத்தில் வன்முறை தீவிரமடைந்துள்ள நிலையில், மேலும் ஒரு இந்து பிரமுகர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

Manigandan Raja

வங்கதேசத்தில் வன்முறை தீவிரமடைந்துள்ள நிலையில், மேலும் ஒரு இந்து பிரமுகர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மாணவர் போராட்டத்தை நடத்திய உஸ்மான் ஹாதி மற்றும் இந்து இளைஞர் தீபு சந்திரதாஸ் ஆகியோர் கொல்லப்பட்ட நிலையில், ராஜ்பாரி மாவட்டத்தை சேர்ந்த அம்ரித் மண்டல் என்ற இந்து இளைஞரை அப்பகுதியை சேர்ந்த கும்பல் கடுமையாக தாக்கிக் கொன்றது. இந்த சூழலில், மைமன்சிங்கில் உள்ள பாலுகா உபாசிலா என்கிற இடத்தில் ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்த காவலாளி பிஜேந்திர பிஸ்வாஸ் என்கிற இந்து பிரமுகர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரை, சக ஊழியரான நோமன் மியா என்பவர் சிறிய ரக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.