பாகிஸ்தான், சௌதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் அடங்கிய மெக்கா பாதுகாப்புக் கூட்டணியின் உயர்நிலைக் கூட்டம் இஸ்லாமாபாத்தில் தொடங்கியுள்ளது. ஏமனில் ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கும், சௌதி அரேபியா ஆதரவுபெற்ற அரசு படைகளுக்கும் இடையேயான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில், ஏமன் உள்நாட்டு மோதல் உள்ளிட்ட விவகாரங்கள் மீதான மெக்கா கூட்டணியின் நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.