ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு
2017-ல் ராணுவ நடவடிக்கையின்போது 10,000 பேர் கொலை
2017-ல் ராணுவ நடவடிக்கையின்போது ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மியான்மர் அரசு இனப்படுகொலையில் ஈடுபட்டதாக ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பளித்துள்ளது.
15 நீதிபதிகள் கொண்ட அமர்வு 9-க்கு 6 என்ற வாக்கு வித்தியாசத்தில் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. ஒரு நாடு இனப்படுகொலை செய்ததாக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது இதுவே முதல்முறை.இனப்படுகொலை தடுப்பு சாசனத்தை மியான்மர் மீறியதாகக் கூறி காம்பியா நாடு 2019-ல் இந்த வழக்கை தொடுத்தது.