உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு இம்ரான் கான் அவசரக் கடிதம் சிறையில் இருந்து நான் உயிருடன் திரும்புவது கடினம் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படக்கூடும்-இம்ரான் கான்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சிறையில் தனது உடல்நிலை மோசமடைந்து வருவதாகக் கூறி அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.
வலது கண்ணில் 85 சதவீத பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உரிய மருத்துவச் சிகிச்சை வழங்க நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.