தேசிய பாதுகாப்பு நலன் கருதி துருக்கியை தலைமையிடமாக கொண்ட செலிபி ஏவியேஷனின் விமான நிலைய சேவைகளுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவுடனான போரில் பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு அளித்ததையடுத்து, இந்திய விமான நிலையங்களில் பல்வேறு சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள செலிபி ஏவியேஷனின் அனுமதியை, சிவில் ஏவியேஷன் பாதுகாப்பு பணியகம் ரத்து செய்தது.
இதனை எதிர்த்து செலிபி ஏர்போர்ட் சர்வீசஸ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இதில் வாதாட எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை என்று செலிபி தரப்பு கூறிய நிலையில் 21 ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.