பயங்கரவாதிகளுக்கு உதவி செய்கிறது என்பதால் பாகிஸ்தானுக்கு கடன் வழங்க கூடாது என IMF எனப்படும் சர்வதேச நிதியத்திடம் இந்தியா அழுத்தம் கொடுத்த பல நாட்களுக்குப் பிறகு, அது குறித்த விளக்கம் ஒன்றை IMF வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு முதற்கட்டமாக எட்டாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக கடன் வழங்கியதற்கான அனைத்து நிபந்தனைகளையும் பாகிஸ்தான் நிறைவேற்றி விட்டதாக ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது.
மொத்தமாக பாகிஸ்தானுக்கு சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கும் IMF ன் முடிவுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்த து. இந்தியாவுக்கு எதிராக பயங்கவாத செயல்களை நடத்தும் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்து வருவதாலும், கடனாக பெறும் பணத்தை பயங்கரவாத செயல்களுக்கு பாகிஸ்தான் பயன்படுத்தும் எனவும் இந்தியாவின் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.