அமெரிக்காவை மற்றொரு போருக்குள் இழுத்துவிட இஸ்ரேல் முயற்சிப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரான் ரசாயன ஆயுதங்களை உருவாக்கி வருவதாகவும், அவற்றை மருந்து தொழிற்சாலைகளுக்குள் மறைத்து வைத்திருப்பதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார். இதை முற்றிலுமாக மறுத்துள்ள அராக்சி, தனக்காக மற்றொரு போரை நடத்த அமெரிக்காவை ஏமாற்றி இழுப்பதே இஸ்ரேலின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.