இஸ்ரேல் தரை வழி தாக்குதலை தீவிரப்படுத்த உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து காசாவின் கிழக்கு பகுதிகளில் இருந்து பாலஸ்தீனியர்கள் ஆயிரக்கணக்கானோர் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வெளியேறி வருகின்றனர்.
காசாவின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் ஏற்கனவே குண்டுமழை பெய்து வரும் நிலையில் இப்பொது எஞ்சிய பகுதியையும் இஸ்ரேலின் கொடிய கரங்கள் சுற்றி வளைத்துள்ளது.
காசாவின் முழு கட்டுப்பாட்டையும் தனது கையில் எடுத்துக் கொள்ள இஸ்ரேல் முடிவு செய்து அதற்கான தாக்குதல் திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகிறது.
தற்போது காசாவின் சுமார் 75 சதவிகித பகுதியை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு விட்டதாக கூறப்படுகிறது.