Gaza peoples death 
உலகம்

காசா முனைப்பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் தாக்குதலில் 21 பேர் உயிரிழப்பு: பலர் படுகாயம்..!

காசா முனை பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 21 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயம் அடைந்துள்ளனர்.

Srini Vasan

காசா முனை பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 21 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயம் அடைந்துள்ளனர்.

காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் போரில், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட இதுவரை 52 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதனிடையே, ஹமாஸ் ஆயுதக் குழுவின் பிடியில் இன்னும் 59 பேர் பணய கைதிகளாக உள்ள நிலையில், அதில் 25- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.