அமெரிக்காவின் வாஷிங்கடனில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் அடுத்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் செய்யத் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்காவிற்கான இஸ்ரேலிய தூதர் கூறியுள்ளார்.
வாஷிங்டனில் யூத அருங்காட்சியகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இஸ்ரேலிய தூதரக ஊழியர்களான லிஷின்ஸ்கி மற்றும் சாரா மில்கிரிமும் அங்கு வந்த மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தப்பியோட முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.