ரோமில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
உக்ரைன்-ரஷ்யா போர் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே உக்ரைன்-ரஷ்யா இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இது குறித்தும் ஆலோசனையின் போது பேசியதாக சொல்லப்படுகிறது.
போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.