டிரம்ப் 
உலகம்

அமெரிக்க அதிபர் டிரம்ப்-பின் அழைப்பை ஏற்க மறுத்த கிம்

வடகொரிய அதிபரை தொடர்புகொள்ள பலமுறை முயற்சி டிரம்ப் பலமுறை முயற்சி செய்தும் பதில் கிடைக்கவில்லை

Manigandan Raja

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னைத் தொடர்புகொள்ள பலமுறை முயற்சி செய்தும் பதில் கிடைக்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தொலைபேசி அழைப்புகள் மட்டுமின்றி, தனிப்பட்ட கடிதம் ஒன்றையும் அனுப்ப டிரம்ப் முயற்சி செய்துள்ளார். ஆனால், ஐநா அலுவலகத்தில் வடகொரிய தூதரிடம் வழங்கப்பட்ட அந்தக் கடிதம், பிரிக்கப்படாமலேயே அமெரிக்க அதிகாரியிடம் திருப்பி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.