இந்தியாவில் நாக்பூர், ராம்பூர் மற்றும் பெங்களூருவில் தாக்குதல்கள் நடத்திய லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சைஃபுல்லா காலித், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவனாக செயல்பட்ட இவனுக்கு தீவிர பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது.
மேலும், வெளியில் நடமாட வேண்டாம் எனவும் அந்த அமைப்பு சார்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில், சிந்து மாகாணத்தின் மாட்லி நகரில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியே வந்த சைஃபுல்லா காலித், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.